கடவுளின் பூமியில்..
கடந்த பத்து ஆண்டுகளாகவே, கேரளத்தில் பருவமழை, அசுர மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது பேரிடர்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதில், கனவிலும் கண்டிருக்க முடியாத கோரத் தாண்டவத்துடன் வயநாடு நிலச்சரிவும் சேர்ந்துகொண்டது.
புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை
வயநாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய்வு மையம், நிலச்சரிவு நேரிடுவதற்கு 16 மணி நேரத்துக்கு முன்பு விடுத்த எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு ஏன்?
மலைப்பாங்கான பகுதியில் மக்கள்தொகைப் பெருக்கம், மோசமான கட்டட அமைப்பு, மலைப்பகுதியில் அதற்கேற்றவாறு திட்டமிடப்படாத நகரமயமாதல் காரணங்களுடன், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பல காரணிகள், உலக வெப்பமயமாதலின் வேகத்தை அதிகரித்து, அதனால், திடீரென அதிக கனமழை பெய்து கூட்டாக நிலச்சரிவுக்கு வழிவகுத்தன.
காளான் போல கட்டடங்கள்… இன்றோ?
கல்பேட்டை பகுதியில் 2021 – 22ல் மட்டும் புதிதாக 3,500 கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று?
மீண்டவர்களின் கண்ணீர் கதை
மாநில அரசு, அறிவித்த ரூ. 300 உதவித் தொகைக்கான முதல் தவணை செப்டம்பரிலும் 2 ஆம் தவணை நவம்பரிலும்தான் கிடைத்திருக்கிறது. தற்போதைக்கு தேயிலைத் தோட்டத் தொழில் மட்டுமே உதவிக்கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல். வேலை கிடைத்தாலும் முகாமிலிருந்து இரண்டு மணி நேரம் பயணித்தால் மட்டுமே வேலை என்ற நிலை. தற்போதைக்கு வாடகைக்கு ரூ. 6,000 கொடுக்கும் உதவி மட்டும் கைகொடுக்கிறது என்கிறார்கள் மக்கள்.
நிவாரண உதவிப் பட்டியலில் தவறுகள்
மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயனாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தப்பும் தவறுமாக தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியலை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறார்கள்.
நிதியின்றி..
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொள்ள இயலாமல் தவித்து வருகிறார்கள். மாநில அரசு பெரும் நிதியை ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டாலும் போதுமானதாக இல்லை.

