• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




December 11, 2024, 11:37 am IST

Tamil Live Breaking News : திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு!

கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மலைசரிவுக்கு பின் அதிகமானோர் மலையேறக்கூடாது என வல்லுநர் குழு அறிக்கை தந்துள்ளது. மலையேற அனுமதி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

December 11, 2024, 1:40 pm IST

Tamil Live Breaking News : ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டதிற்கு வரும் ஜன.13ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

December 11, 2024, 12:52 pm IST

Tamil Live Breaking News : வடிவேலுக்கு எதிராக பேச மாட்டேன்: ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்!

வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்துள்ளார். தனக்கு எதிராக அவதூறாக பேசிவருவதாக சிங்கமுத்து மீது ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் தான் வடிவேலுக்கு எதிராக தவறான கருத்துக்களை இனி வெளியிடப்போவதில்லை என நடிகர் சிங்கமுத்து பதில் அளித்துள்ளார்.

விளம்பரம்
December 11, 2024, 12:49 pm IST

Tamil Live Breaking News : இந்தியாவின் கவனம் இதை நோக்கி திரும்பும்..

“நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ഒന്നു ആലോചിച്ചു നോക്കൂ, നൂറ് വർഷങ്ങൾക്കു മുൻപ് നമ്മുടെ സമൂഹം എവിടെയായിരുന്നു, ഇപ്പോൾ നാം എവിടെ എത്തിനിൽക്കുന്നു…
ഈ മാറ്റങ്ങൾക്കു വിത്തു പാകിയ വൈക്കം സത്യാഗ്രഹത്തിന്റെ ശദാബ്ദി സമാപന ആഘോഷത്തിൽ നാളെ ഞാൻ നേരിൽ പങ്കെടുക്കുന്നതാണ്.

അതെ പറ്റിയുള്ള വീഡിയോ:

நூறாண்டுகளுக்கு முன்பு… pic.twitter.com/XRqxdnrS65

— M.K.Stalin (@mkstalin) December 11, 2024

December 11, 2024, 11:36 am IST

Tamil Live Breaking News : தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க தடை இல்லை!

தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் இயக்குவதற்கு தடை இல்லை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்ஸிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது . மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. பைக் டாக்ஸிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தற்போது அனைத்து வித வாகனங்களும் தணிக்கை உத்தரவிட்டுள்ளோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் தேவைகளை உணர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி செயல்படுத்தி வருகிறோம் ” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

December 11, 2024, 11:06 am IST

Tamil Live Breaking News : சென்னையில் வானில் வட்டமடிக்கும் 7 விமானங்கள்!

சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. அதில், டெல்லி விமானம் பெங்களூரூக்கு திருப்பி விடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 9.30,மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே, தோகா, மலேசியா, புவனேஸ்வர், மும்பை டெல்லி உள்பட 7 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.

அதைப்போல் துபாய், சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி, துர்காபூர், டெல்லி, கோவை, சிலிகுரி, புனே செல்லக்கூடிய 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து டெல்லி விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மற்ற விமானங்களில் மழை, காற்று வேகம் குறைந்த பின் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்
December 11, 2024, 10:54 am IST

Tamil Live Breaking News : டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசு இன்று ஆலோசனை!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் சுரங்க அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். ஆலோசனையின் முடிவில் ஓரிரு நாளில் சுரங்கம் அமைப்பது தொடர்பான முடிவுகள் வெளியாகலாம். சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

December 11, 2024, 10:50 am IST

Tamil Live Breaking News : தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆஜராக நோட்டீஸ்!

ஹைதராபாத்தில் செய்தியாளர்களை தாக்கிய புகாரில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை விசாரணைக்காக ஆஜராக காவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

December 11, 2024, 9:45 am IST

Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரம்…. 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை

சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
December 11, 2024, 9:15 am IST

Tamil Live Breaking News : டங்ஸ்டன் விவகாரம் – கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று சுரங்க ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

December 11, 2024, 7:59 am IST

Tamil Live Breaking News : சென்னையில் இன்று பிற்பகல் தொடங்கும் மழை..!

சென்னையில் இன்று பிற்பகல் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதேபோல், வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், அதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.

December 11, 2024, 6:57 am IST

Tamil Live Breaking News : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

இன்று காலை 10 மணி வரை தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் மேலும் திருவள்ளூர், சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விளம்பரம்
December 11, 2024, 6:51 am IST

Tamil Live Breaking News : டெல்டா மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • First Published : December 11, 2024, 6:50 am IST



Read More

Previous Post

தங்க விலையில் தொடர் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

Next Post

‘ரோஹித் சர்மா விரைவில் பார்முக்கு திரும்ப விரும்புகிறேன்’: புஜாரா

Next Post
‘ரோஹித் சர்மா விரைவில் பார்முக்கு திரும்ப விரும்புகிறேன்’: புஜாரா

‘ரோஹித் சர்மா விரைவில் பார்முக்கு திரும்ப விரும்புகிறேன்’: புஜாரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin