புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம். டி. ஆர். ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று(டிச. 8) காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. அன்னாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக 1980 முதல் 1983 வரையிலும், 1990 முதல் 1991 வரையிலும் பதவி வகித்தவர். 2001 முதல் 2006 வரை, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தவர்.

