• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விமானத்தில் வருவதால் உச்சத்தில் முருங்கை விலை: நகரப்புறங்களில் கிலோ ரூ.400 வரை விற்பனை | drumstick moringa, price skyrocket as it arrives by plane

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
விமானத்தில் வருவதால் உச்சத்தில் முருங்கை விலை: நகரப்புறங்களில் கிலோ ரூ.400 வரை விற்பனை | drumstick moringa, price skyrocket as it arrives by plane
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழக உணவு பாரம்​பரி​யத்​தில் சாம்​பாருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் முருங்​கைக்​காய் சாம்​பாருக்கு முக்​கி​யத்துவம் அதிகம். பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்​மார்​களின் ஊட்டச்​சத்து குறைபாட்டை முருங்கை நீக்கு​கிறது. கோவை அரசு தோட்​டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளி​யிட்​டுள்ள தகவல் தொகுப்​பில், 100 கிராம் முருங்​கைக் காயில் கால்​சியம் 30 மில்லி கிராம், மக்னீசியம் 24 மி.கி. ஆக்சாலிக் அமிலம் 101 மி.கி. பாஸ்​பரஸ் 110 மி.கி. பொட்​டாசியம் 259 மி.கி, கந்தகம் 137 மி.கி. வைட்​ட​மின் பி-கோலின் 423 மி.கி. வைட்​ட​மின் சி 120 மி.கி. இருப்​பதாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த ஒரு மாதமாக முருங்​கைக் காயின் விலை உயர்ந்து வருகிறது. கோயம்​பேடு சந்தை​யில் செப்​டம்பர் மாதத்​தில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்​திருந்​தது. இந்நிலை​யில் தற்போது மொத்த விலை​யில் ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், சில் லறை விற்​பனை​யில் ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் விற்​கப்​பட்டு வருகிறது.

இந்நிலை​யில் விலை ஏற்றம் குறித்து மதுரை​யில் உள்ள அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மைய அதிகாரிகள் கூறிய​தாவது: உலக அளவில் உற்பத்​தி​யாகும் முருங்​கைக் காயில் 24 சதவீதம் தமிழகத்​தில் உற்பத்​தி​யாகிறது. தேசிய அளவில் தமிழகம் முதலிடத்​தில் உள்ளது. இங்கு கடந்த நிதி​யாண்​டில் 20,742 ஹெக்​டேர் பரப்​பள​வில் முருங்கை பயிரிடப்​பட்​டது. 8 லட்சத்து 41,807 டன் உற்பத்தி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் முருங்​கைக்​காய் உற்பத்​தி​யில் திண்​டுக்கல் மாவட்டம் 5,625 ஹெக்​டேர் பரப்புடன் முதலிடத்​தி​லும் 3,247 ஹெக்​டேர் பரப்புடன் கரூர் மாவட்டம் 2-வது இடத்​தி​லும், 2,822 ஹெக்​டேர் பரப்புடன் தேனி மாவட்டம் 3-ம் இடத்​தி​லும் உள்ளன.

பருவமழை தீவிரமாக இருக்​கும் அக்டோபர்- நவம்பர் மாதங்​களி​லும், பலத்த காற்று வீசும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்​களி​லும் அதிக அளவில் முருங்கை பயிரில் பூக்கள் உதிரும். பனிபொழி​யும் டிசம்​பர்- ஜனவரி மாதங்​களில் பூக்கள் உருவா​காது. அதனால் இக்கால​கட்​டங்​களில் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்​து​விடும். இந்நிலையம் சார்​பில் கடந்த 20 ஆண்டு​களாக மதுரை உழவர் சந்தை​யில் முருங்​கைக்​காய் விலையை கண்காணித்து வருகிறோம்.

அதன்​படி, நவம்பர் முதல் பிப்​ரவரி மாதம் வரை முருங்​கைக்​காய் விலை உயர்ந்தே இருந்​திருக்​கிறது. சராசரியாக டிசம்பர் மாதத்​தில் ரூ.125, ஜனவரி​யில் ரூ.110, நவம்பர் மாதத்​தில் ரூ.85, பிப்​ரவரி மாதத்​தில் ரூ.78-க்கு விற்​பனை​யாகி​யுள்​ளது. மார்ச் முதல் அக்டோபர் வரை ரூ.24 முதல் ரூ.60 வரை விற்​பனை​யாகி​யுள்​ளது. அதனாலேயே இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்​தில் விலை உயர்ந்​துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

முன்னெப்​போதும் இல்லாத வகையில் கிலோ ரூ.400 வரை சென்றது குறித்து கோயம்​பேடு சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் நலச்​சங்கத் தலைவர் எஸ்.எஸ்​.​முத்​துக்​கு​மாரிடம் கேட்​ட​போது, இப்போது தமிழகத்​தில் எந்த மாவட்​டத்​திலிருந்​தும் கோயம்​பேடு சந்தைக்கு முருங்​கைக்​காய் வரவில்லை.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்​களில் இருந்​து​தான் வருகிறது. முன்பு ரயில் மூலம் கொண்டு​வரப்​பட்டன. 2 நாட்​களுக்கு மேல் பயணிப்​பதால் வாடி​விடு​கிறது. அதனால் தற்போது விமானங்​களில் முருங்​கைக் காய் கொண்டு​வரப்​படு​வ​தால் விலை உயர்ந்​துள்ளது” என்றார்.

முருங்​கைக்​காய் விலை உயர்ந்​துள்ள நிலை​யில், ஓட்டல்​களில் முருங்​கைக்​காய் பயன்​பாடு எப்படி உள்ளது என சென்னை ஓட்டல் சங்கத் தலைவர் என்.ரவியிடம் கேட்​ட​போது, “தக்​காளிக்கு மாற்று புளி. முருங்​கைக்​காய்க்கு மாற்று முருங்​கைக்​காய் தான். ஒரு கிலோ பருப்​புக்கு 300 கிராம் என்ற அளவில் முருங்​கைக்​காய் பயன்​படுத்து​வோம். இப்போது பயன்​பாட்டை 75 சதவீதம் குறைத்து தான் சாம்​பார் தயாரித்து வருகிறோம்” என்றார்.

மழை மற்றும் பனி காலங்​களில் பூக்கள் உதிர்வதை தடுக்க எடுத்​துள்ள நடவடிக்கைகள் குறித்து தோட்​டக்கலை துறை அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “பிளாஸ்​டிக் உறைகளை ​கொண்டு முருங்கை மரங்களை மூடி, மழை ​காலங்​களில் பூக்களை பாது​காக்க ​முடி​யுமா என அரசின் 8 தோட்​டக்கலை பண்​ணை​களில் ஆராய்ச்சி மேற்​கொள்​ளப்​பட்​டு வருகிறது” என்​றனர்​.



Read More

Previous Post

மகாராஷ்டிர பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு | Maharashtra Assembly session begins Opposition MLAs walk out

Next Post

மஞ்சுங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் கைது! | Makkal Osai

Next Post
மஞ்சுங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் கைது! | Makkal Osai

மஞ்சுங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin