தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொலை செய்த 63 வயதுடைய தந்தை, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
29 மற்றும் 15 வயதுடைய பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர். அந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டார்.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|