தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூா், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திராட்சை சாகுபடி இருந்தாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாகுபடியாகும் திராட்சையை கேரளாவாசிகள் விரும்பி வாங்குவர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திராட்சை சாகுபடியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பொருளாதார ரீதியாக பயன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் திராட்சை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது.
மேலும், பூச்சித் தாக்குதல் வரத்து இல்லாமலும் மிகவும் அவதிப்பட்டனர் திராட்சை விவசாயிகள். கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் குறிப்பாக சுருளிப்பட்டி பகுதியில் ஆண்டுக்கு மூன்று வெள்ளாமை திராட்சை சாகுபடி நடைபெற்று வரும்.சுருளிப்பட்டி பகுதியில் எப்போது பார்த்தாலும் திராட்சை கொடியில் திராட்சைப் பழங்கள் இருக்கும் நிலையில், தற்போது ஒரு மாத காலமாக சுருளிப்பட்டி பகுதி முழுவதும் திராட்சை விவசாயம் நடைபெறவில்லை.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திராட்சை வரத்து இல்லாததால் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற திராட்சைப் பழங்கள் 100 ரூபாயை கடந்து மொத்த விலைக்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் கிலோ 120 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திற்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துதான் திராட்சை ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த விலை ஏற்றம் எனக் கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…