கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் 9 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் இந்த மோசமான வானிலை நிலவும் என்றும், மேலும்
சிலாங்கூர், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங்கில் குவாந்தன், ஜெரான்டுட், கேமரன்மலை, நாபோ, பெந்தோங், தெமர்லோ, ஜோகூர் (தங்காக், முவார்) மற்றும் கெடா (கூலிம் , பண்டார் பாரு) ஆகியவை அடங்கும் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பேராக்கில் கிரியன், லாரூட், கோல கங்சார், மஞ்சோங், கிந்தா, கம்பார், பாகன் டத்தோ, முவாலிம் ஆகிய பகுதிகளிலும் சரவாக்கில் கூச்சிங், செரியன், செமரஹான், பிந்துலு, மிரி ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.


