• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
அஸ்வெசும கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


– மேலதிக செயலாளர் ,செயலாளர் நியமனங்களை வழங்கல்
– 77ஆவது சுதந்திரதின வைபவத்தை ஒழுங்குபடுத்த விசேட குழுவை நியமித்தல்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமைக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகள் குடும்பங்கள் 04 வகையான சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகளின் தாக்கங்கள் முழுமையாக நீங்காமையால், நிலையற்றவர்கள் மற்றும் ஆபத்துக்கு உட்பட்டவர்கள் ஆகிய சமூகப் பிரிவினர்களுக்குரிய முதலாம் சுற்று விண்ணப்பங்களுக்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து சில காலங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சமகால வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொள்ளும் போது தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுத் தொகை போதியளவாக இன்மையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமையைக் கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக ரூ. 8,500 ஐ ரூ. 10,000 வரைக்கும், ரூ. 15,000 ஐ ரூ. 17,500 ஆகவும் அதிகரிப்பதற்கும் மற்றும் அதற்கிணங்க திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கின்ற நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்
• நிலையற்றவர்கள் எனும் சமூகப் பிரிவினருக்கான நலன்புரிக் கொடுப்பனவு செலுத்தப்படும் காலப்பகுதியை 2025.03.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
•ஆபத்துக்கு உட்பட்ட சமூகப் பிரிவினருக்காக கொடுப்பனவுக் காலத்தை 2025.12.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

2. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் காணப்படும் வீதிப் புனரமைப்புக் கருத்திட்டங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பம்
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கொடுகடன் நிதியிடல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருசில கருத்திட்டங்களுக்கு வெளிநாட்டுக் கொடுகடன் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததுடன், வெளிநாட்டுக் கொடுகடன் நிதியிடலின் கீழ் வழங்கிய நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு இயலுமை கிட்டவில்லை. அத்துடன், மூலப்பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையால், உள்நாட்டு நிதியிடல் மூலம் மேற்கொள்ளப்பட்ட செலவுகளும் பாரியளவில் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக ஒப்பந்தக்காரர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த செலவுறுதிச் சிட்டைகளை ஈடுசெய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இன்மையால் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளது.

இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2024ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு வெளிநாட்டுக் கடன் நிதியிடலுக்குக் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எஞ்சுவதற்குப் பதிலாக உள்நாட்டு நிதியிடலின் கீழ் தேவையான மேலதிக நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக குறைநிரப்பு மதிப்பீடொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

3. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மருத்துவ விநியோகத்திற்கான பெறுகை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்து விநியோகங்கள் தொடர்ந்து வரும் ஒரு ஆண்டுக்கு அடையாளங் காணப்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்வதற்கு 2024.10.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கூட்டு வியாபார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள், சுகாதார அமைச்சுடன் உற்பத்திக்குப் பின்னரான கொள்வனவு (Buy Back) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தற்போது ஒப்பந்தத்தை மேற்கொண்டிராத உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விநியோகிக்கக்கூடிய மருந்து வகைகளின் 04 பட்டியல்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளன. குறித்த 04 பட்டியல்களையும் பரிசீலித்து அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கீழ்க்காணும் வகையில் பெறுகைகளை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 42 வகையான மருந்துகளை விநியோகிப்பதற்காக பெறுகை ரூ. 5,398.83 மில்லியன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும்
• 131 வகையான மருந்துகளை விநியோகிப்பதற்காக ரூ. 16,611.42 மில்லியன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கூட்டு வியாபார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கும்
• 36 வகையான மருந்துகளை விநியோகிப்பதற்காக பெறுகை ரூ. 9,022.10 மில்லியன் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுடன் உற்பத்திக்கு பின்னரான கொள்வனவு (Buy Back) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கும்
• 130 மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு ரூ. 13,374.65 மில்லியன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 24 உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கும்

4. பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பதவிக்கான நியமனம்
பிரதமர் அலுவலகத்தில் தற்போது நிலவுகின்ற 02 மேலதிக செயலாளர் பதவி வெற்றிடங்களுக்குக் கீழ்வரும் வகையில் நியமனங்களை வழங்குவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தற்போது குருநாகல் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஜே.எம்.ஐ.ஆர்.கே.ஜயசுந்தரவை பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்
• தற்போது நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணிபுரிகின்ற இலங்கை திட்டமிடல் சேவையின் Iஆம் தர அதிகாரியான திருமதி. சாந்தனீசாகரிகா போகஹவத்த அவர்களை பிரதமர் அலுவலகத்தின் மேலதிக் செயலாளர் பதவிக்கு நியமித்தல்

5. கண்டி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
கண்டி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவி 2024.11.25 ஆம் திகதி தொடக்கம் வெற்றிடமாகவுள்ளது. குறித்த பதவிக்கு தற்போது அம்பாறை பிரதேச செயலகத்தில் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான யூ.பீ.இந்திக அநுருத்த பியதாசவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் பதவிக்கான நியமனம்
பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக தற்போது பணிபுரிந்து வருகின்ற இலங்கை நிர்வாக சேவை I ஆம் தர அதிகாரியான எம்.ஜீ.சீ.எஸ். ரணசிங்கவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் பதவிக்கு நியமிப்பதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. அரச சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதற்கொத்த சேவைப் பிரிவுகளிலுள்ள அலுவலர்களை அரச சேவையில் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளாக பட்டப்படிப்பைக் கருத்தில் கொள்ளாததுவிடினும், பட்டத்துடன் கூடிய அரச சேவையில் பல்வேறு பதவிகளுக்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் அரச சேவையில் இணைந்து கொள்வதற்கு எதிர்பார்ப்புடனுள்ள பட்டதாரிகளுக்குக் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளங்காணல் மற்றும் தீர்வுகாணல்
1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை 07 சந்தர்ப்பங்களில் பல்வேறு முன்மொழிவுகள் மூலம் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் 150,000 இற்கும் அதிகமானவர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் திறன் மற்றும் தொழிற் தகைமைகள் தொடர்பான சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரம்ப உள்ளகப் பயிற்சிகள் சரியான வகையில் வழங்கப்படாமையாலும், முறைசார்ந்த வகையில் அப்பதவிகளுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படாமையாலும் குறித்த அலுவலர்களுக்கு எதிர்பார்க்கப்படும் செயலாற்றுகையை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 15,800 இற்கும் அதிகமானவர்கள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தற்போது பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

அதற்கமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக நடவடிக்கைகளிலும், செயலாற்றுகை தொடர்hகவும் தற்போது மேலெழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை அடையாளங்கண்டு, அப்பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து அதற்கான நிலைபேறான தீர்வுகளை முன்வைப்பதற்காக பிரதமர் தலைமையிலான கீழ்க்காணும் அமைச்சர்கள்/பிரதி அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர்கள் குழு :
• பிரதமர் – (தலைவி)
• பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
• பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
• கல்வி மற்றம் உயர்கல்வி பிரதி அமைச்சர்
• தொழிற்கல்வி பிரதி அமைச்சர்
அதிகாரிகள் குழு :
• பிரதமரின் செயலாளர் – (தலைவர்)
• செயலாளர், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
• செயலாளர்,கல்வி மற்றம் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
• செயலாளர், நிதி ஆணைக்குழு
• தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகம்
• தாபன பணிப்பாளர் நாயகம்
• பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
• இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

8. 2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறல் மற்றும் புதிய நியமனப் பத்திரங்களைக் கோருவதற்கான ஏற்பாடுகளை வகுத்தல்
2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறல் மற்றும் புதிய நியமனப் பத்திரங்களைக் கோருவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்காக உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2024.11.25 அன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் தலைமையில் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை இரத்துச் செய்து புதிய நியமனப் பத்திரங்கள் கோரப்பட்டு தொடர்ந்த வரும் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமை மற்றும் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறுவதற்கும், புதிய நியமனப் பத்திரங்களைக் கோருவதற்குமான ஏற்பாடுகளை வகுத்துக் கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. அரச நிறுவனங்களில் அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்றல்
அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒருசில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வாகனங்கள் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொண்டு, சுங்க இயைபு முறைக் குறியீடு (HS Code) 87.03 இன் கீழுள்ள பெற்றோல் 1800 உஉ கொள்ளவுக்கு அதிகமான வாகனங்கள் மற்றும் 2300 cc கொள்ளளவுக்கு மேற்பட்ட டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள வாகனங்கள் (டபள் கப் வண்டி/சிங்கல் கப் வண்டி/வான்/பஸ் வண்டி) முறையான பெறுகை முறைமையைக் கையாண்டு 2025.03.01 திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மூலம் பாவனையிலிருந்து அகற்றுவதற்கும், அதற்கிணங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு திறைசேரியின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. “Clean Srilanka” நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தற்போது இலங்கை பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அரசியல், சமூக, ஆன்மீக மற்றும் சுற்றாடல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்களவு பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதைக் கருத்தில் கொண்டு எமது நாட்டு மக்களின் நல்லாரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய நடவடிக்கையாக “Clean Srilanka” எனும் பெயரிலான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. “செல்வந்த நாடு, அழகிய வாழ்வு” எனும் புதிய அரசின் தொலைநோக்குக்கமைய மேற்கொள்ளப்படுகின்ற நிலையுருமாற்ற தொடக்க முயற்சி சமூக ரீதியான, சுற்றாடல் ரீதியான மற்றும் விழுமிய ரீதியான எழுச்சியை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். இவ்வேலைத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியத்தை உருவாக்கவதற்காக பணிப்பாளர் சபையொன்றின் மூலம் நிர்வகிக்கப்படும் “Clean Srilankaநிதியம்” எனும் பெயரிலான நிதியத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2025 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 77ஆவது சுதந்திரதின வைபவம்
2025.02.04 அன்று 77ஆவது சுதந்திரதின வைபவத்தை நடாத்துதல் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்குரிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் மேற்பார்வைக்கு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.10.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள குறித்த விடயதான அமைச்சர்களை உள்ளடக்கியதாக 2025 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 77ஆவது சுதந்திரதின வைபவத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதி தலைமையிலும் மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யேபசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.“நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம்” (Vote on Account) – 2025
2025 ஆம் ஆண்டுக்கான முதல் 04 மாதகாலத்திற்கு “நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம்” (Vote on Account) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அதற்காக பிரேரணை சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2024.11.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணை சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பிரேரணை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் பாடசாலை மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமையும், அது 55% வீதமான மாணவர்களின் கல்வியில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதாகவும், பாதிப்புக்களுக்கு உள்ளாகிய பிள்ளைகளில் 53.2% வீதமானவர்கள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளனர் அல்லது முற்றுமுழுதாக நிறுத்தியுள்ளனர். 26.1% முன்னர் பயன்படுத்திய பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதனால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்காக 2025ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைக் கொள்வனவு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரூ. 6,000 கொடுப்பனவு நலன்புரி நன்மைகள் சபை மூலமாக வழங்கல்
• அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் உட்சேர்க்கப்படாத பெற்றோர்களை இழந்த, குடும்பத்தில் தாய் அல்லது தந்தை இயலாமைக்குட்பட்டவராக இருக்கின்ற பிள்ளைகள், சிறுவர் இல்லங்களிலுள்ள பாடசாலை கல்வி பயில்கின்ற அனைத்து மாணவர்களுக்கும், மற்றும் விசேட நிலைமைகளால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுகருவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவர் ஒருவருக்கு ரூ. 6,000 கொடுப்பனவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக வழங்கல்.

14. இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கல்
உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவுகின்ற நாட்டரிசி மற்றும் ஏனைய அரிசி வகைகளின் பற்றாக்குறையாலும், கடந்த நாட்களில் ஏற்பட்ட கடும் மழை காரணமாகவும் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் கருத்தில் கொண்டு, அரசி இறக்குமதிக்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளை நீக்குவதற்கு பொருத்தமானதென அமைச்சரவை கருதுகின்றது.

அதற்கமைய, இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரமின்றி 2024.12.20 ஆம் திகதி வரை எமது நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post அஸ்வெசும கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி appeared first on Thinakaran.

Read More

Previous Post

நாட்டின் 9 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை | Makkal Osai

Next Post

குடும்ப அட்டைகளுக்கு ரூ.2000 .. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

Next Post
குடும்ப அட்டைகளுக்கு ரூ.2000 .. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

குடும்ப அட்டைகளுக்கு ரூ.2000 .. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin