ஐக்கிய நாடுகள் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் கடந்த (29) வெள்ளிக்கிழமை கொழும்பு 7இல், அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘பலஸ்தீன விடுதலை’ என்ற சிங்கள மொழி நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராசிரியர்கள் அர்சுன பராக்கிரம, லியனகே அமரகீர்த்தி , ஐ.நா. தூதுவராலயத்தின் வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரூ, பலஸ்தீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹிசான் அபுதாஹ் ஆகியோரும் உரையாற்றினர்.
இந் நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், கர்தினால் மல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
The post கொழும்பில் நடைபெற்ற பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின நிகழ்வுகள் appeared first on Thinakaran.