ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டுக்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் இது நாட்டுக்கு மிகவும் நல்லதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருவதாகவும் அது சாதகமான அறிகுறி எனவும் சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
The post அரசின் சிறந்த தீர்மானங்களுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் appeared first on Thinakaran.