• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை இறுதியாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இருள் சூழ்ந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இன்று (30) ஆவது நாளாக இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும், வாகன சாரதியின் சடலமும், இன்னும் ஒரு இளைஞரின் சடலமுமாக மொத்தம் 08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலை இருந்த நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறன.

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.

காரைதீவு குறூப் நிருபர் சகா
நூருல் ஹுதா உமர்

The post உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

LIK திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது – இயக்குனர் விக்னேஷ் சிவன் | Makkal Osai

Next Post

புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்

Next Post
புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்

புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin