• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவியின் புற்றுநோயை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி 850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவ்ஜோத்சிங் சித்துவின் கருத்து பின்னணி குறித்து பார்க்கலாம்.

கடந்த நவம்பர் 21ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புற்றுநோய் மருந்து குறித்து சில சர்ச்சையாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

அதில், தனது மனைவிக்கு 4ம் நிலை புற்றுநோய் பாதிப்பு இருப்பதால் இன்னும் 40 நாட்கள் மட்டுமே உயிருடன் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், கடின உணவு முறையை பின்பற்றியதால் 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ய முடிந்தது என்று தெரிவித்திருந்தார்

மேலும் மக்கள் அதிகம் உணவுப் பொருளாக பயன்படுத்தும் பால், கோதுமை மைதா மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் தான் புற்றுநோய் பாதிப்பு தூண்டப்படுவதாகவும், எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்றும் கூறியிருந்தார்.

விளம்பரம்

இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து சொசைட்டி உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவ்ஜோத் சித்து தனது மனைவி 4-ஆம் நிலை புற்றுநோயில் இருந்து அலோபதி மருந்துகளின்றி அற்புதமாக குணமடைந்துவிட்டதாக கூறுவது தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார் .

இது புற்றுநோயுடன் போராடுபவர்களிடம் அலோபதி மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்

சித்து தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அவர் மீது சொசைட்டி சார்பில் 850 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அவர் கூறும் கருத்துக்களை நிரூபிக்கும் மருத்துவ ஆதாரங்களை ஒருவார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – இந்த படத்தில் மறைந்துள்ள பனிக் கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? 10 வினாடி சேலஞ்ச்!!

சித்து தான் கூறிய கருத்துக்களை 7 நாட்களுக்குள் நிரூபிக்க தவறும் பட்சத்தில் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 850 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் சித்துவின் மனைவியிடம், “எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்று கூறும் உங்களது கணவரின் கருத்தை ஆதரிக்கின்றீர்களா? என்றும் நோட்டீசில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்த விவகாரத்தில் சித்து இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

Next Post

சையது மோடி பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து | Syed Modi International 2024: Sindhu, Lakshya stay on course for first titles

Next Post
சையது மோடி பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து | Syed Modi International 2024: Sindhu, Lakshya stay on course for first titles

சையது மோடி பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து | Syed Modi International 2024: Sindhu, Lakshya stay on course for first titles

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin