• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டுகளும் தாக்கமும் – ஒரு தெளிவுப் பார்வை  | US Allegations on Adani and its Impact explained

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டுகளும் தாக்கமும் – ஒரு தெளிவுப் பார்வை  | US Allegations on Adani and its Impact explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரும், இரண்டாவது பெரும் பணக்காரருமான கவுதம் அதானி மீது லஞ்சம் வழங்குதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்திய அதிகாரிகளுக்கு 265 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க திட்டம் தீட்டியதாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டுவதற்காக அதனை மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றை அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், வழக்கறிஞர்கள் அலுவலகம் பதிவு செய்துள்ளன.

குற்றச்சாட்டுகள் என்னென்ன?: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களில் முத்திரைப் பதித்து வருபவர்தான் அதானி குழும நிறுவனத் தலைவரான 62 வயது கவுதம் அதானி. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராகவும் உள்ள கவுதம் அதானி, அவரது மருமகனும், கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாகர் மற்றும் அஸுர் பவர் குளோபல் நிறுனத்தின் நிர்வாகி சிரில் கபேன்ஸ் ஆகியோர் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

கவுதம் அதானி மற்றும் சாகர் ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், மத்திய பாதுகாப்பு சட்டங்களின் எதிர்ப்பு விதிகளை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளது. இதன் மூலம் நிரந்தரத் தடை, உரிமையியல் தண்டனை மற்றும் அதிகாரிகள், இயக்குநர்களுக்கான தடை ஆகிய நடவடிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

இத்துடன் சேர்ந்த இணை நடவடிக்கையாக, கவுதம் அதானி , அவரது வழக்கறிஞர் சாகர், வினீத் எஸ்.ஜான் மீது புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். பிழையான மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கைகள் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இருந்து பல கோடி டாலர் மதிப்புள்ள திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கு பங்குப் பத்திரங்கள் மூலம் சதி செய்துள்ளனர் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

‘குறியீட்டுப் பெயர்கள்…’: ப்ளூம்பெர்க் செய்திக் குறிப்பின்படி, லஞ்சம் கொடுக்கும் சதித்திட்டத்துக்காக கவுதம் அதானி பல முறை இந்திய அதிகாரிகளை நேரில் சந்தித்துள்ளார். அதானியுடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களின் திட்டத்தின் நடைமுறைப்படுத்துவதற்கு நேரடியாக சந்திப்பது மற்றும் மின்னணு செயலிகள் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், இருப்பிடங்களை கண்டறியவும், உறுதியளிக்கப்பட்ட லஞ்சப் பணம் பெறப்பட்டதை உறுதி செய்யவும் செல்போன்களைப் பயன்படுத்துவது, வழங்கப்பட்ட தொகைக்கான ஆவணங்களை புகைப்படம் எடுப்பது என தங்களின் லஞ்சம் வழங்கும் முயற்சிகளை மின் ஆவணங்களாக மாற்றியுள்ளனர்.

அவர்கள் எந்த வகையிலான பணம் செலுத்தும் முறை சிறந்தது என்பதை தீர்மானிப்பதற்காக பவர்பாயின்ட் மற்றும் எக்ஸல் பிரசன்டேஷன் தயாரித்துள்ளனர். அதில் கவுதம் அதானியால் பரிந்துரைக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்று, ‘இந்திய எரிசக்தி நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும் தொகை, வளர்ச்சி நிதி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடிக்கடித் தங்களை வி, ஸ்னேக் மற்றும் நியுமெரோ யுனோ மினுஸ் என்ற குறியீடுட்டுப் பெயரில் அழைத்துள்ளனர். கவுதம் அதானி மிஸ்டர் ஏ, நியுமெரோ யுனோ மற்றும் தி பிக் மேன் என்று அழைக்கப்பட்டுள்ளார். குழுவில் உள்ள சிலர் இந்தச் சதித்திட்டதில் தங்களின் பங்கேற்பை மறைப்பதற்காக பவர் பாயின்ட் பகுப்பாய்வு மற்றும் மின்னணு தொடர்பு ஆதாரங்களை அழித்துள்ளனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகள், அதானி உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன என்று ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

அதானி நிறுவனம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். ‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என்று அமெரிக்க நீதித் துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.

அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

பாஜக சொல்வது என்ன?: அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான செய்தி, ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களும் எதிர் குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அடிபடும் தமிழக அரசு பெயர்…: ‘அதானி நிறுவனத்தின் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, லஞ்சம் வழங்குதல் தொடர்பான அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில்தான், அதாவது 2021-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை, அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீண்டும் போர்க்கொடி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டு எழுதுவது இது முதல் முறையில்லை. முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது.

பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டது. இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்னர் மீண்டன.

ஹிண்டன்பர்க்கின் அந்த அறிக்கை, இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு ஒரு கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்றத்தை முடக்கின.

இந்த நிலையில், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் வழக்கறிஞர்கள், அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில மணி நேரத்தில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு கொண்டு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவருக்கு விருப்பமான தொழிலதிபருக்கும் இடையில் உள்குத்து இருப்பதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.

ஹிடண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதராமற்றவை என்று நிராகரிகப்பட்ட நிலையில், தற்போது அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க புதிய மற்றும் நம்பகமான செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான அமளி முடங்கிய நிலையில், தற்போது வரும் 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ளது கவனிக்கத்தக்கது.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: இதனிடையே, அதானி நிறுவன பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தை புதன்கிழமை வீழ்ச்சியில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 422.59 புள்ளிகள் சரிந்து 77,155.79 ஆக நிறைவடைந்தது. அதேபோல் நிஃப்டி 168.60 புள்ளிகள் சரிந்து 23,349 ஆக இருந்தது. பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி கண்டன. மும்பை பங்குச்சந்தையில் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தற்போதைய சூழல், அதானி குழும பங்குகளின் சந்தை மூலதனத்தில் இருந்து ரூ.2 லட்சம் கோடியை இழக்கச் செய்துள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா: இதனிடையே, அதானி குழுமம் உடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், “தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || நாளை முதல் தவணை விடுமுறை

Next Post

சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும்

Next Post
சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும்

சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin