அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜென்டினா அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் நட்பு ரீதியான சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதாகவும், அந்த அணியில் மெஸ்ஸியும் இடம் பெறுவார் என்று கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறினார்.
இந்தப் போட்டியை கேரள மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவை எதிர்த்து விளையாட உள்ள அணி எது என்பது குறித்தும், எங்கு போட்டியை நடத்துவது என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி கடைசியாக 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வெனிசுலாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
