கோயிலை திறந்துவைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் பூஜை செய்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, அபுதாபியில் 55 ஆயிரம் சதுரடி அடி பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.. இந்தக் கோயில் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலி வெள்ளை மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 900 கோடி மதிப்பில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, நிலநடுக்கம், மற்றும் அதிக வெப்பத்தால் பாதிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்பத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த கோயில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ளது
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir, the first Hindu temple in Abu Dhabi.
PM Modi will shortly inaugurate the temple. pic.twitter.com/rU9EnWqGNj
— ANI (@ANI) February 14, 2024
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார். கோயிலை திறந்துவைத்த பின்னர் சுவாமி நாராயணனுக்கு பிரதமர் பூஜை செய்தார்.
முன்னதாக, பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…