இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான குவாண்டம் எனர்ஜி தனது பிரபலமான ஸ்கூட்டர்களுக்கு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் சில பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. அவற்றில் நிறுவனம் பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு சில பிரபலமான ஸ்கூட்டர்களில் தீபாவளி சலுகைகளை வழங்கியுள்ளது.
அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குவாண்டம் எனர்ஜி ஸ்கூட்டர்களில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். எனவே இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் குவாண்டம் எனர்ஜி ஸ்கூட்டர்களை வாங்கினால், ஆயிரக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். ஆக்ரா, லக்னோ மற்றும் கான்பூரில் புதிதாக திறக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் உட்பட குவாண்டம் எனர்ஜியின் அனைத்து ஷோரூம்களிலும் இந்த தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் டெஸ்ட் ரைடுகளை முன்பதிவு செய்யலாம்.
தள்ளுபடியில் உள்ள மாடல்கள்:
பண்டிகைக் கால தள்ளுபடியில் பிளாஸ்மா எக்ஸ், பிளாஸ்மா எக்ஸ்ஆர் மற்றும் மிலன் ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
பிளாஸ்மா எக்ஸ்
அசல் விலை: ரூ 1,29,150 (எக்ஸ்-ஷோரூம்)
தீபாவளி விலை: ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்)
பிளாஸ்மா எக்ஸ்ஆர்
அசல் விலை: ரூ 1,09,999 (எக்ஸ்-ஷோரூம்)
தீபாவளி விலை: ரூ.89,095 (எக்ஸ்-ஷோரூம்)
மிலன்
அசல் விலை: ரூ 85,999 (எக்ஸ்-ஷோரூம்)
தீபாவளி விலை: ரூ.79,999 (எக்ஸ்-ஷோரூம்)
ஸ்கூட்டர் அம்சங்கள்:
பிளாஸ்மா எக்ஸ்:
பிளாஸ்மா எக்ஸ் ஸ்கூட்டர் ஆனது 1500W மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 65 கிமீ அதிகபட்ச வேகத்தைக் கொடுக்கும் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை பயணிக்கலாம்.
பிளாஸ்மா எக்ஸ்ஆர்:
பிளாஸ்மா எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் ஆனது 1500W மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ அதிகபட்ச வேகத்தைக் கொடுக்கும் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம்.
மிலன்:
மிலன் ஸ்கூட்டர் ஆனது 1000W மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ அதிகபட்ச வேகத்தைக் கொடுக்கும் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம்.
இது குறித்து குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குனர் சேதனா சுக்காபள்ளி கூறியதாவது, எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆனது செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு இணக்கமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
