டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
டெல்லியில் நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று காற்று மாசு தரக்குறியீடு 481 என்ற அளவில் பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்றது இல்லை என்ற நிலையில், டெல்லியில் காற்று மாசு 450ஐ கடந்துள்ளது.
இதனால், ஒவ்வொருவரும் சுமார் 30 சிகரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்பட்டுள்ளன.
Also Read :
தென்னிந்திய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எப்படி இருக்கிறது?
மேலும் பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய 160 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 7 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 30 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை தவிர பிற வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். வேளாண் பயிர் கழிவுகளை எரிப்பதால் வட இந்தியா மருத்துவ அவசர நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
