• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நினைத்தது நடக்க பூ பரிகாரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நினைத்தது நடக்க பூ பரிகாரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேரம் இன்னும் வரவில்லை, சுக்கிர திசை வரவில்லை என்றெல்லாம் சிலர் புலம்பிக் கொண்டிருப்பார்கள். நம்முடைய உடலில் உள்ள சக்கரங்களை சுத்தம் செய்து, அவற்றின் இயக்கங்களை சீராக்கினாலே வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்வதை நாம் கண் கூடாக பார்க்க முடியும்.

இத்தகை மாற்றங்களுக்கு இறை வழிபாட்டுடன் நம்பிக்கையுடன் சில பரிகாரங்களையும் நம்முடைய தினசரி வாழ்க்கையில் செய்து வர வேண்டும்.

நாம் மனதில் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நடக்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியப்படுவது கிடையாது. குறிப்பாக பணம், அதிர்ஷ்டம் ஆகிய விஷயங்களில் இவை நடைபெறுவது கிடையாது. நாம் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.

எல்லாமே இருக்கு. ஆனால் மனதில் நிம்மதி இல்லை. அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனால் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வி ஏற்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்க மாட்டேன் என்கிறது. நான் சொல்லும் யோசனைகள் படி நடந்த மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். என்னுடைய ராசி மற்றவர்களுக்கு பலன் தருகிறது. ஆனால் எனக்கு எந்த வித பயனோ, முன்னேற்றமோ இல்லை என புலம்புவர்கள் நிறைய பேர் நம்மில் உள்ளனர்.

நம்முடைய உடம்பில் ஏழு சக்கரங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஏழு சக்கரங்கள் போக, உடலின் பல பகுதிகளில் பல சக்கரங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் நம்முடைய உள்ளங்கை, மனிப்பூரகம், இடது பக்க தோள்பட்டை ஆகிய பகுதிகளில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்கினால் அல்லது தடை இல்லாமல் இயங்கினால் தான் அதிர்ஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். நினைத்தது நடப்பது, பணம் வந்து கொண்டே இருப்பதற்கு இந்த சக்கரங்கள் சரியாக இயங்க வேண்டும். நம்முடைய உயர்சக்தியானது சரியாக இயங்கினால் மட்டுமே நம்முடைய அதிர்ஷ்டம் நமக்கு பலன் தரக் கூடியதாக அமையும்.

இந்த உயிர் சக்தி தூண்டப்பட்டு, சக்கரங்கள் சரியாக இயங்க மிக எளிய பூ பரிகாரம் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும். பணம் உங்களைத் தேடி வந்து கொண்டி இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அப்படியே நடப்பதுடன், நீங்கள் சொல்லும் சொல்லும் வெல்லும் சொல்லாக இருக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு அதிக நேரம், நிறைய பொருட்கள் என எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு பூ மட்டும் போதும்.சிறிதளவு கட்டிய அல்லது உதிரியாக இருக்கும் மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பூவுடன் எந்த பொருள் பெருக வேண்டும் என நிவைக்கிறீர்களோ அந்த பொருளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக பணம் பெருக வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளலாம். அல்லது செல்வம் பெருக வேண்டும் என நினைப்பவர்கள் தங்கம், வெள்ளி என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நினைத்தது நடக்க வேண்டும், ஒரு காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதை நீள நிற மார்க்கரால் அரச இலை அல்லது சிறு துண்டு பேப்பரில் எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் வெறும் மல்லிகைப்பூவை கூட எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் குளித்து முடித்த பிறகு குல தெய்வத்தை வணங்கி விட்டு, சிறிது மல்லிகைப்பூவை இடது உள்ளங்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு பணம், தங்கம், வேண்டுதல் எழுதியது ஆகிய ஏதாவது ஒன்றை வைத்து வலது கையால் மூடிக் கொள்ள வேண்டும். இப்போது உங்களின் எண்ணம் முழுவதையும் நெற்றி பொட்டில் இரு புருவங்களுக்கு மத்தியிலோ அல்லது மூக்கின் நுனியிலோ நிலை நிறுத்த வேண்டும். இப்படி எண்ணங்களை ஒரு முகப்படுத்தும் போது, நமது உடலில் உள்ள சக்கரங்களின் ஆற்றல் தூண்டப்படும். கண்களை மூடி, அமைதியாக நமது வேண்டுதலை மனதில் நினைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நாம் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்க துவங்கும்.

மல்லிகைப் பூ ஒரு தனித்துவமான மலராகும். மற்ற பூக்களை விட மனதை மயக்கும், எண்ணத்தை ஈர்க்கும் தன்மை மல்லிகைப்பூவிற்கு உண்டு. மற்ற பூக்களை விட மல்லிகைப்பூவிற்கு மங்களகரமான தன்மை உண்டு. இந்த பூவிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்து வந்தால், பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.



Read More

Previous Post

ரெடி-டு-மூவ் ப்ராப்பர்ட்டி வாங்குற ஐடியா இருக்கா… நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயம் இருக்கு!!!

Next Post

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு – நேரலை

Next Post
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு – நேரலை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு - நேரலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin