ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், டிஜிட்டல் முறையால் தமிழ்நாட்டில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து ஜியோ நிறுவனம், அதிவேக இன்டர்நெட், எளிய கட்டணத்தில் தரவுகள் மற்றும் அனைவரும் எளிதில் பெறக் கூடிய டிஜிட்டல் சேவைகள் மூலம் தமிழ்நாட்டை டிஜிட்டல் முறையில் அதிவேகமாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக “Jio True 5G” சேவைகள் சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்றவற்றில் பெரும் மாற்றங்களை செய்ய உதவி வருகிறது. 2024 ஏப்ரலுக்குப் பிறகு வீடுகளுக்கான இண்டர்நெட் பிராட்பேண்ட் வர்த்தகப் பிரிவில் சந்தையில் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குறுகிய காலத்திலேயே 10 லட்சம் வீடுகளில் பிராட்பேண்ட் இணைப்புகள் என்பதைக் கடந்து அதிகரித்தபடி உள்ளது. ஜியோவை பயன்படுத்தும் நபர் தற்போது நாளொன்றுக்கு 30 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை பயன்படுத்துகிறார்.
மேலும் “ஜியோ ஏர் ஃபைபர் 5ஜி” மூலம் வீடுகளில் இன்டர்நெட்டை நிறுவி, கூடுதல் வேகத்துடன் பயன்படுத்த முடியும். உலகின் மிகப் பெரியதும், வேகமாக வளரும் 5ஜி நெட்வொர்குமான ஜியோ, தமிழ்நாட்டில் 12,265 “5 G” டவர்களை நிறுவியுள்ளது.
முக்கியமாக “ஜியோ ட்ரூ 5ஜி” வசம்தான் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை உள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செல்போன், இண்டர்நெட் சிக்னல் எளிதில் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் “ஜியோ ட்ரூ 5ஜி” சேவைகள் மூலமாக ஆண்டிபட்டி, திருச்சி பிச்சாண்டார்கோவில், நெய்வேலி வடக்குத்து, புளியங்குடி மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற உட்புறப் பகுதிகளிலும் கூட இன்டர்நெட் தரவு பயன்பாடு வெகுவாக உயர்ந்திருப்பதை ஜியோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஜியோ 5ஜி என்பது வேகம் மட்டுமின்றி ரோபோக்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை, ஆளில்லாமல் இயங்கும் கார்கள், ரிமோட் சென்சார்ஸ் எனப் பல விதங்களில் உதவிகரமாக உள்ளது.
அரசுடன், கல்வி நிறுவனங்களை வேகமாக இணைக்கும் டிஜிட்டல் பாலமாகவும் உள்ள ஜியோ 5ஜி, மாணவர்கள் டிஜிட்டல் கல்வி பயில பேருதவி புரிந்து வருகிறது. இந்தியாவில் மொத்த இணையதள தரவுகளில் 60 சதவீதம் ஜியோ வழியாகவே நடப்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)