• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஏகேடி… பின்னணி என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஏகேடி… பின்னணி என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மலையகத் தமிழ் பெண்கள் 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தீவில் வீசிய ஏகேடி அலையால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வாரிச் சுருட்டியுள்ளது ஆளும் கட்சி. பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் பொருளாதார முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்நிறுத்திக் களமிறங்கி புதிய புரட்சியாக உருவெடுத்தார் அநுர குமார திசநாயக்க என்ற ஏகேடி. அதிபராகப் பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

விளம்பரம்

மொத்தம் உள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், 29 பேர் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர். வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிபர் ஏகேடி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 இடங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 இடங்களையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 5 இடங்களையும் பெற்றன. ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையில் இயங்கும் இலங்கை பொதுஜன பெரமுனா 3 இடங்களை மட்டுமே பெற்றது.

விளம்பரம்

அதிபர் தேர்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாமல், விருப்ப வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற ஏகேடி, தற்போது, 61 புள்ளி ஐந்து ஆறு சதவீத வாக்குகளை அள்ளியிருக்கிறார். அதிபர் தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாசா தற்போது 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். 17 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே 5 சதவீதத்தைக் கூடத் தொடவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, தற்போது வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

விளம்பரம்

கொழும்பில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஹரிணி அமரசூரிய, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற உறுப்பினர் என்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்த எந்த அமைச்சரும் மீண்டும் வெற்றி பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர். ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் நுவரெலியாவில் போட்டியிட்ட கலைச்செல்வியும், பதுளையில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்து புதிய வரலாறு படைத்துள்ளனர்.

விளம்பரம்

இலங்கை மலையக மக்களுக்கு 1977-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் நிலையில், 47 ஆண்டுகளில் முதல் முறையாகப் பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது தவிர, தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் அதிபர் அநுர குமார திசநாயக்க கொடி நாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாகச் சிங்களரான ஏகேடியைத் தலைமையாகக் கொண்ட கட்சி வெற்றி பெற்றுள்ளது. திரிகோணமலை, வன்னி, அம்பாறையையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட 7 இடங்களில் மட்டுமே இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றது.

விளம்பரம்

Also Read | இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!

அதிபர் தேர்தலின் போது சஜித் பிரேமதேசவுக்கு தமிழர் பகுதிகளில் அதிக ஆதரவு இருந்த நிலை, தற்போது மாறியது. அதிபராகத் தேர்வான பின்னர், தமிழர் பகுதியில் 34 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி – அச்சுவேலி பிரதான சாலையைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க அநுர குமார உத்தரவிட்டார். இது தமிழ் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மேலும், தெற்கு – வடக்கு என இன பாகுபாடு இருக்காது, அரசு வசம் உள்ள தமிழர் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என ஏகேடி அறிவித்ததும் அவருக்கான ஆதரவைப் பன்மடங்கு உயர்த்தியது. இதனால், வரலாற்றில் முதல்முறையாகச் சிங்களரைத் தலைமையாகக் கொண்ட கட்சிக்குத் தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.

விளம்பரம்

இதற்கு முன் இருந்த தலைவர்கள் சிங்களத் தலைவர்களாகவே தங்களை வெளிப்படுத்த முயன்ற நிலையில், அதற்கு மாற்றாக நின்ற அநுர குமார திசநாயக்க தமிழர்கள், இஸ்லாமியர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ளதால், அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.

Read More

Previous Post

குறுகிய காலத்தில் 10 லட்சம் வீடுகளில் பிராட்பேண்ட்… தமிழ்நாட்டை மாற்றிய ஜியோ 5ஜி… வியத்தகு மாற்றங்கள்!

Next Post

இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள் | Makkal Osai

Next Post
இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள் | Makkal Osai

இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin