• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சொந்த காலில் நில்லுங்க..” – அஜித்பவாருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“சொந்த காலில் நில்லுங்க..” – அஜித்பவாருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கடந்த 2022ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அதன்படி அஜித்பவார் தலைமையில் ஒரு அணியும், சரத்பவார் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதில், யாருக்கு கட்சியும் சின்னமும் சொந்தம் என இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இறுதியில் தேர்தல் ஆணையம் அஜித்பவார் தலைமையிலான அணியே தேசியவாத காங்கிரஸ் என்றும் அவர்களுக்கே கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான கடிகாரம் சின்னமும் சொந்தம் என்றும் அறிவித்தது. அதேபோல், சரத்பவார் தலைமையிலான அணியினர் ‘தேசியவாத காங்கிரஸ் – சரத்சந்தர பவார்’ என செயல்பட்டுவருகிறது.

விளம்பரம்

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத்பவார் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்தவரும் உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அஜித்பவார் தரப்பு கடிகார சின்னத்தை பயன்படுத்தலாம். ஆனால், செய்திதாள்களில் ‘எனக்கும் சரத்பவாருக்கும் இடையே இருக்கும் கட்சி பிரச்சனையில் இந்தச் சின்னம் தகராறில் இருக்கிறது” என விளக்கம் அளிக்கும்படி தெரிவித்தது. குறிப்பாக இதனை மராத்தி மொழியில் தெரிவிக்க வேண்டும் என அஜித்பவார் தரப்புக்கு அறிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

விளம்பரம்

இந்நிலையில், இரு அணிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இதில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் குறிப்பிடத்தக்க இடங்களை வென்றது.

இந்நிலையில், இன்று (13ம் தேதி) மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது சரத்பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சரத்பவாரின் புகைப்படங்களை அஜித்பவார் தரப்பினர் தேர்தல் பிரச்சாரத்தில் உபயோகிக்கின்றனர்” என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி சூர்யா காந்த், “சரத் பவாருக்கும் உங்களுக்கும் (அஜித்பவார்) கருத்தியல் வேறுபாடு உள்ளது. நீங்கள் அவருக்கு எதிராக போராடுகிறீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் சொந்த கால்களில் நிற்க முயற்சிக்க வேண்டும்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
மருத்துவரை குத்தியது ஏன்? – கைதான விக்னேஷ் வாக்குமூலம்

களத்தில் கவனம் செலுத்துங்கள். மக்கள் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். மக்களுக்கு எங்கு வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியும். அவர்களின் புத்திசாலித்தனத்தில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. சரத் ​​பவார், அஜித் பவார் யார் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வீடியோக்கள் வாக்காளர்களை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் போகலாம். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும் போது, ​​அதை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

விளம்பரம்

.

Read More

Previous Post

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தானாக முன்வந்த வெளிநாடு

Next Post

IND vs BAN |‘ரோஹித் சர்மாவின் எளிமையான வியூகம் வங்கதேசத்தை வென்றது’ – கான்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் பேட்டி

Next Post
IND vs BAN |‘ரோஹித் சர்மாவின் எளிமையான வியூகம் வங்கதேசத்தை வென்றது’ – கான்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் பேட்டி

IND vs BAN |‘ரோஹித் சர்மாவின் எளிமையான வியூகம் வங்கதேசத்தை வென்றது’ – கான்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin