• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை அணிக்காக தோனி விளையாடப் போகும் கடைசி மேட்ச்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சென்னை அணிக்காக தோனி விளையாடப் போகும் கடைசி மேட்ச்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடக்கூடிய கடைசி போட்டி குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

சென்னை அணிக்காக தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்கள் வரை விளையாடி உள்ளார். ஒட்டுமொத்தமாக தோனி தனது 18 ஆவது ஐபிஎல் சீசனை விளையாட தயாராகி வருகிறார். அன் கேப்டு (UnCapped) ஆட்டக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த தோனியை சென்னை அணி 4 கோடி ரூபாய் வழங்கி அணியில் தக்க வைத்து கொண்டுள்ளது.

விளம்பரம்

கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ. 18 கோடியும், வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவுக்கு  13 கோடி ரூபாயும், ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு ரூ. 12 கோடியும், ரவீந்திர ஜடேஜாவுக்கு 18 கோடி ரூபாயும் வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏலத்திற்கான மொத்த தொகையான 120 கோடி ரூபாயில் 65 கோடியை காலி செய்துள்ளது சென்னை அணி. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி 55 கோடி ரூபாய் தொகையுடன் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.

விளம்பரம்

அவரிடம் தோனியின் கடைசி சீசன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

தோனியை பொறுத்த அளவில் அவர் எல்லாவற்றையுமே ரகசியமாக வைத்துக் கொள்வார். கடைசி நேரத்தில் தான் அவர் என்ன சொல்கிறார் என்பது தெரியவரும். சென்னை அணி மீதான அவரது பேரார்வத்தை எல்லோரும் அறிவார்கள்.

இதையும் படிங்க – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன்ஷிப் மாற்றம்? கவுதம் காம்பீர் தகவல்

தோனி ஒருமுறை தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் தான் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர், தான் இனி விளையாடப் போவதில்லை என்று சொல்லும் வரையில் அவர் சென்னை அணியில் இருக்கலாம் என்று தெரிவித்தார்

விளம்பரம்

.

Read More

Previous Post

ஜார்க்கண்ட்டில் நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு – ஏற்பாடுகள் தீவிரம் | Jharkhand heads to first phase of Assembly polls tomorrow, key seats to look out for

Next Post

எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு & வெளியான தகவல்

Next Post
எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு & வெளியான தகவல்

எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு & வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin