வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து 9வது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 84.38 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் 2 காசுகள் குறைந்து 84.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக நேரத் தொடக்கத்தின்போது இந்திய ரூபாய் மதிப்பு 84.39 ஆக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பானது 83.80 மற்றும் 84.50 காசுகளுக்கு இடையே பயணிக்கலாம் என நிபுணர்கள் கணித்த நிலையில், தொடர் சரிவைச் சந்தித்தது.
இதேபோன்று கச்சா எண்ணெய் விலையும் 0.25 காசுகள் சரிந்து ஒரு பேரல், 71.65 டாலருக்கு விற்கப்படுகிறது.

&w=1200&resize=1200,675&ssl=1)