புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கவளாகத்தில் மூன்றாவது தேசிய அளவிலான கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. வட்ட வடிவ அமைப்பை உருட்டிவிட்டு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிறுத்தும் கர்லிங் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ்பெற்றது. பனிக்கட்டி தளத்தில் நடைபெறும் விளையாட்டான கர்லிங் நம் நாட்டிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.
அதன்படி புதுச்சேரியில் முதன்முறையாக தேசிய அளவில் கர்லிங் விளையாட்டுப் போட்டிகளை, தேசிய கர்லிங் விளையாட்டு அமைப்பு, புதுச்சேரி கர்லிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது. போட்டியினை தேசிய கர்லிங் அமைப்பின் தலைவர் ரேஷ்மி சலூசா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இப்போட்டியில் புதுவை, தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, உத்தரகாண்ட், மணிப்பூர், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில கர்லிங் அணிகள் பங்கேற்றன.
இதில் 14, 17 மற்றும் 19 வயது உட்பட்ட ஆண், பெண் தனி தனி பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மேலும் இதில் வெளிநாட்டு தூதரக ஆணையர் ஜெனுலகா த்ரோனி கலந்து கொண்டார். இறுதிப்போட்டியில் ஹரியானா மாநிலம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)