அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன
இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீஸார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீஸார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


