மட்டக்களப்பு – ஓட்டமாவடி, கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று(10.11.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பாறூக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
குறித்த நபர், தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வேளை, எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

