ஒரு பாம்பு புகுந்து விட்டாலே படையை நடுங்கி ஓடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த பாம்புகளுக்கு தங்களது வீடுகளில் பிரத்தியேகமாக அறையை ஒதுக்கி, அவைகளுடன் கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இது குறித்த பின்னணி தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
இந்திய நாடு அதன் அழகான நிலப்பரப்புகளுக்கும், எழில் கொஞ்சும் கிராமங்களுக்கும் பெயர் போனது. மகாத்மா காந்தி ஒரு முறை நாட்டினுடைய ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்று கூறியிருந்தார். அந்த வகையில் இன்று இந்தியாவில் லட்சக்கணக்கான கிராமங்கள் நாட்டின் முன்னேற்றங்களுக்கு விவசாயம், உற்பத்தி போன்றவற்றால் முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கிராமங்களிலும் பல சுவாரசியங்கள், வினோதங்கள், பாரம்பரியமிக்க சடங்குகள் அடங்கியிருக்கின்றன. அந்த வகையில் ஒரு கிராமத்தில் உலகின் மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகளான இந்திய நாகப் பாம்புகளுடன் கிராம மக்கள் வாழ்கின்றனர். அந்த பாம்புகளும் இவர்களை கொத்துவது கிடையாது.
குறிப்பாக குழந்தைகளும் அந்த பாம்புகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்கிறார்கள். இந்த வினோதமான கிராமம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமம் ஆகும். இங்கு பொதுமக்கள் பாம்புகளை வழிபாடு செய்வது மட்டுமின்றி, அந்த பாம்புகள் தங்களது வீடுகளில் தங்குவதற்காக பிரத்யேக அறைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க – இளைஞரின் உயிரை பறித்த விளையாட்டு! கர்நாடகாவில் நடந்த சோக நிகழ்வு!
இவற்றை குடும்ப உறுப்பினர்களாக கருதுவதுடன் குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கிறார்கள். பாம்புகளும் இந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கின்றன. வீடு கட்டப்படும் போதே நாகப் பாம்புகளுக்கு என தனி அறை ஒதுக்கப்படுகிறது. நாகப்பாம்புகள் இந்த கிராம மக்களுடன் மக்களை கொத்தாமல் எப்படி அவருடன் இணக்கமாக வாழ்கிறது என்பது இன்னும் தீர்க்கப்படாத புதிராக உள்ளது. இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
