Last Updated : 25 Oct, 2024 04:55 AM
Published : 25 Oct 2024 04:55 AM
Last Updated : 25 Oct 2024 04:55 AM

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதாகும் ராணி ராம்பால், 2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-வது இடம் பெற உதவியவர். 16 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடி உள்ளார் ராணி ராம்பால். இந்திய அணிக்காக 254 போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் 205 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது, பத்ம விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow
FOLLOW US
தவறவிடாதீர்!


