தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்துமே உடல் நலம், மனநலம், சிந்தனை, மொழி, பண்பாடு, கணிதம், வாழ்வியல், விடாமுயற்சி நிர்வாகம் என அனைத்தையும் மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்றைய குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டு மொபைல் கேம்களில் மூழ்கி மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வேறு திசையில் செல்கின்றனர்.
குறிப்பாக நகர்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மறந்து போய் உள்ள நிலையில், கட்டிடக்கலை வல்லுனர்கள் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். புதுவை நகரப் பகுதியில் ஒரு வீதியை தேர்ந்தெடுத்து அந்த வீதியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழாவாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நான்காம் ஆண்டு பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்லாங்குழி, கோலிக்குண்டு, கண்ணா வளையல், பம்பரம், சுங்கரக்கா, டயர் ஒட்டுதல், ஊஞ்சல் என 15 பாரம்பரிய விளையாட்டுகள் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் களைகட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்து கொண்டு அந்த வீதியே திருவிழாபோல் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக விளையாடி மகிழ்ந்தனர்.
பாரம்பரிய விளையாட்டினை ஒருங்கிணைத்த சுகுணா கூறும் போது, தற்போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பல காணாமல் போய்விட்டன. நம் நினைவுகளில் மட்டும் எஞ்சி இருக்கும் ஒரு சில விளையாட்டுகளையாவது இன்று தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை துவங்கி உள்ளோம். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டினை மீட்டெடுப்போம் என்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…