கேரளாவில் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் மதம் சார்ந்த வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பித்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட கோபாலகிருஷ்ணனின் செல்போன் எண்ணில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும், பல துறை செயலாளர்களுக்கு குழுக்களுக்கான லிங்குகள் சென்றன. “மலையாளி இந்து அதிகாரிகள்” என்ற பெயரில் கடந்த தீபாவளியன்று இந்த வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சேவையில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகளும் 11 வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக பல மூத்த அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சில நிமிடங்களில் அந்த வாட்ஸ் ஆப் குழுக்கள் டெலிட் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்!
மேலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடர்பாக மூத்த அதிகாரிகள் கோபாலகிருஷ்ணனை தொடர்புகொண்டு விசாரித்தபோது, தாம் இந்த குழுக்களை தொடங்கவில்லை என்றும்
தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
