79
– இம்மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகள் நிறைவு
– டிசம்பர் மாத ஒதுக்கீடுகள் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் ஆரம்பம்
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.
இந்த இணையவழி முறைமை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும், இந்த மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகள் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, டிசம்பர் மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


&w=1200&resize=1200,675&ssl=1)