விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (02) ஏற்பட்ட அவசர நிலை காரணமாகவே லொஹான் ரத்வத்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
அதனை தொடர்ந்து, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், லொஹான் ரத்வத்தவின் உடல்நிலை குறித்து அவதானம் செலுத்தி வைத்திய சிகிச்சைக்கு அனுப்புமாறு நீதவான் பரிந்துரைத்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

