பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் சேர்வதன் மூலம், குடும்பங்கள் மின் கட்டணத்தில் இருந்து பணத்தை மிச்சப்படுத்தலாம். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன, இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் ( (PM Surya Ghar Muft Bijli Yojana) என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய சக்தி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ரூ.75,021 கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரதான் மந்திரி இலவச மின்சாரத் திட்டத்தின் (PM Muft Bijli Scheme Registration) பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சார திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இந்த திட்டம் 1 கோடி குடும்பங்கள் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது. இதன் பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரைவில் அருகிலுள்ள தபால் அலுவலகம் மூலம் மக்கள் பதிவு செய்யலாம் என்று இந்திய அஞ்சல் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் முதலில் https://pmsuryaghar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தொடர்ந்து அதில் உள்ள அப்ளை ஃபார் ROOFtop சோலார் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
இப்போது உங்கள் மாநிலம் மற்றும் மின்சார விநியோக நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுக்கவும். பின் உங்கள் மின் நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை உள்ளிடவும். தொடர்ந்து நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண் உள்ளீடு புதிய பக்கத்திற்குள் உள் நுழையவும். படிவம் திறக்கப்பட்டதும். அதில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி விண்ணப்பிக்கவும்.
இந்த செயல்முறை முடிந்தவுடன், நீங்கள் ஒப்புதலை பெறுவீர்கள். அதன் பிறகு உங்கள் டிஸ்காமில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளரிடமிருந்து ஆலையை நிறுவி கொள்ள முடியும்.
எவ்வளவு மானியம்?
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 6 மாதங்களுக்கான மின் கட்டணத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நுகர்வோருக்கு 3 கிலோவாட் வரையிலான இணைப்புகளுக்கு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரமும், 3 கிலோவாட்டிற்கு மேல் உள்ள மின் இணைப்புகளுக்கு ரூ. 18 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…