• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பண்டிகை காலத்தையொட்டி 3,144 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பண்டிகை காலத்தையொட்டி 3,144 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பண்டிகை காலத்தை ஒட்டி, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று பண்டிகை கொண்டாட, வடக்கு ரயில்வே முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,144 சிறப்பு ரயில் பயணங்களை திட்டமிட்டுள்ளது

“01.10.2024 முதல் 30.11.2024 வரை 3,144 ரயில் பயணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் போன்ற கிழக்கு திசையில் உள்ள மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு 85 சதவீத பண்டிகை சிறப்பு ரயில்கள் சேவை செய்யும்” என வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அசோக் குமார் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

“தீபாவளி மற்றும் சாட் பண்டிகைகளின்போது தொந்தரவு இல்லாத வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக, 26.10.2024 முதல் 7.11.2024 வரை 195 சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இதே காலத்தில் 138 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது’’ என்றார்.

இந்த 13 நாட்களில், வடக்கு ரயில்வே டெல்லியில் இருந்து ஒரு நாளைக்கு 65 கூடுதல் ரயில்களை இயக்கும். இதனால் 1.20 லட்சம் கூடுதல் பெர்த்கள் கிடைக்கும் என வர்மா கூறினார்.

இது தவிர, பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும், வசதியான பயணங்களை எளிதாக்கவும் வழக்கமான ரயில்கள் 123 சிறப்புப் பயணங்களை மேற்கொள்ளும். இவை அனைத்திற்கும் மேலாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 7 வரை முக்கியமான ரயில்களில் 49 கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

“டெல்லி/புது டெல்லி/ஆனந்த் விஹார் டெர்மினல் போன்ற ரயில்வே துறைகளையும் பாட்னா, டானாபூர், முசாபர்பூர், ஜோக்பானி, சஹர்சா, ஜெய்நகர், கதிஹார், தர்பங்கா, கோரக்பூர், ரக்சால், வாரணாசி, கயா, ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா போன்ற நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்கவும் இந்த சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன” என்றார் வர்மா.

2023ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1,48,750 பெட்டிகள் இருந்த நிலையில், தற்போது (சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் உட்பட) மொத்தம் 1,70,434 கூடுதல் பெர்த்கள் கிடைக்கும். இதனால் சுமார் 54,000 (கடந்த ஆண்டு 41,000) முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு சிறப்பு ரயில்களில் இடம் கிடைக்கும் என்று வர்மா கூறினார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
Deepavali: வருடத்தின் 365 நாட்களும் இந்த கிராமத்தில் தீபாவளி தான்.. எங்கு இருக்கு தெரியுமா?

தீபாவளி மற்றும் சத் பூஜையின்போது புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை நிர்வகிப்பது பற்றி பேசிய வர்மா, “இந்த முறை சற்று புதுமையாக 12566 பீகார் சம்பர்க் கிராந்தி, 12394 சம்பூர்ண கிராந்தி, 12554 வைஷாலி மற்றும் 12802 புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் போன்ற கிழக்கு நோக்கி செல்லும் ரயில்கள் பிளாட்ஃபார்ம் எண் 16-ல் இருந்து இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

“புது டெல்லி (NDLS), பழைய டெல்லி (DLI), ஆனந்த் விஹார் டெர்மினல் (ANVT) மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் (NZM) ரயில் நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

பயணிகள் கூட்டத்தை நிர்வகிப்பதை எளிதாக்க, பந்தல்களுடன் கூடிய தற்காலிக காத்திருப்புப் பகுதி, ரயில்கள் குறித்த விசாரணை-முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு உதவும் கவுன்ட்டர்கள், மொபைல் கழிப்பறை வசதிகள், உணவு ஸ்டால்கள், மருத்துவம்/முதலுதவி வசதி, தண்ணீர், கழிப்பறை, உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Most Polluted Cities | டெல்லி, மும்பை, பெங்களூரு அல்ல… உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

புது தில்லி, பழைய தில்லி, ஆனந்த் விஹார் டெர்மினல் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களின் அனைத்து நுழைவு வாயில்களிலும் மோப்ப நாய்ப் படைகள், பைகளை ஸ்கேனர் செய்யும் கருவிகள்/மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றுடன் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

.

Read More

Previous Post

இத்தாலிய தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

Next Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நவம்பர் 5-ம் தேதி தொடக்கம் | Chennai Grand Masters Chess starts on 5th November

Next Post
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நவம்பர் 5-ம் தேதி தொடக்கம் | Chennai Grand Masters Chess starts on 5th November

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நவம்பர் 5-ம் தேதி தொடக்கம் | Chennai Grand Masters Chess starts on 5th November

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin