அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். வெள்ளை மாளிகையில் ஜெலஸ்ன்கியை சந்திப்பதில் ஆவலுடன் இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.
I’m looking forward to hosting my friend President Zelenskyy of Ukraine next week at the White House.
During his visit, I’ll reaffirm America’s commitment to supporting Ukraine as it defends its freedom and independence.
— President Biden (@POTUS) September 19, 2024
இந்த சந்திப்பின்போது போரில் வெற்றி பெறுவதற்கான திட்டம் குறித்து ஜெலன்ஸ்கி எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி வழங்கும்படி பைடனிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்துவார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: Israel | ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ‘விநோத’ தாக்குதல்… லெபனானை நிலைகுலைய செய்யும் இஸ்ரேல்!
நவம்பரில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மற்றொரு சர்வதேச அமைதி உச்சி மாநாட்டை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
