இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.
முன்னதாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததுமே மாலை 4 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அரசு ஊழியர்கள் உட்பட முன்கூட்டியே வாக்கு செலுத்தியோர் மொத்த வாக்காளர்களில் 5 முதல் 6 சதவீதம்வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
மாலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு தாண்டியும் தொடரும் என்றும் நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிலவரம்
அதிகபட்சமாக நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் கொழும்பில் 75%, புத்தளம் மாவட்டத்தில் 78%, மொனராகலையில் 77%, பதுளையில் 73%, கண்டியில் 76%, இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் 74%, கேகாலையில் 72%, குருநாகல் மாவட்டத்தில்70%, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 65.9%, வன்னி தேர்தல் மாவட்டத்தில் 65%, மட்டக்களப்பு 64% என வாக்குகள் பதிவாகியுள்ளன என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திலும் மகிந்த ராஜபக்சேவின் மாவட்டமான அம்பந்தோட்டையில் குறைவாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயகே தெரிவித்துள்ளார். இது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)