இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இவர்கள் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களம் காணுகின்றனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் 50 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
இதையும் படிக்க:
ஒரு கிலோ ரூ.15,000.. உலகின் மிக விலை உயர்ந்த அரிசி வகை எது தெரியுமா?
இந்த முறை ரணில் விக்ரமசிங்க – சஜித் பிரேமதாசா – அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான அதிபர் தேர்தலாக இது இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
