இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு முற்றாக நிராகரித்துள்ளது.
இந்திய ஆயுத தயாரிப்பாளர்களிடம் இருந்து ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்ட பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ஓராண்டுக்கு மேலாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாகவும், ரஷ்யாவின் எதிர்ப்புக்கு பிறகும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றும்,
சுங்கத்துறை ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதனை மறுத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஊகத்தின் அடிப்படையில் செய்தியை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால், இந்திய அணு ஆயுத ஏற்றுமதி சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)