எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8ம் தேதி அமெரிக்காவுக்கு சென்ற ராகுல் காந்தி, டெக்சாஸ், வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவுள்ளார்.
முன்னதாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமானநிலையத்தில் அவரை வரவேற்ற இந்திய வம்சாவளியினர் பெருமளவில் குவிந்து வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து டல்லாஸில் நடந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாடினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த நொடியில் இருந்து இந்திய மக்கள் பிரதமர் மோடியை பார்த்து அஞ்சுவதை நிறுத்திவிட்டனர். அரசியலமைப்பு, மதம் மற்றும் மாநிலங்களின் மீதான தாக்குதலை இனி ஏற்கபோவதில்லை என இந்திய மக்கள் உணர்ந்தது மிகப் பெரிய சாதானை.
இதையும் படியுங்கள் :
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றியெரியும் காட்டுத் தீ – அவசர நிலை பிரகடனம்…
ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவுக்கு ஒற்றைச் சிந்தனை மற்றும் பிற்போக்கான கருத்துகளை நம்புகிறது. ஆனால், காங்கிரஸ் பன்முக சிந்தனையை நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ்., பெண்கள் சமையலறையில் இருக்க வைக்க முயற்சிக்கிறது. அதே காங்கிரஸ் பெண்களின் விருப்புங்களை மதிக்கிறது.
ஆண்கள் குறித்து சிந்திப்பது போலவே பெண்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸுடனான கருத்தியல் மோதலில் இதுவும் ஒரு அங்கம் வகிக்கிறது. பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது என பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும், பெண்கள் பங்களிப்புக்கு நிபந்தனைகளை விதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் பெண்கள் விருப்பப்படி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸில் இருக்கும் பெரும்பாலானோரே இந்திய பல்கலை.களில் துணை வேந்தர்களாக இருக்கிறார்கள். இது கல்வி நிறுவனங்களுக்கு நல்லதல்ல” என்று பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து வலதுசாரி ஆதரவாளர்கள், டல்லாஸ் நிகழ்ச்சியில் ராகுலின் முக்கிய நோக்கமே ஆர்.எஸ்.எஸ். தான். வெளிநாடுகளில் ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் குற்றஞ்சாட்டுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு, லண்டனில் பேசிய ராகுல் ஆர்.எஸ்.எஸ். ஒரு ரகசிய அமைப்பு என்றும், அது ஜனநாயக வழியைக்கொண்டு அதிகாரத்திற்கு வந்து பிறகு ஜனநாயகத்தையே அடிப்பணியச் செய்யும் என்றும் பேசியிருந்தார் என்று தங்களது கருத்தை தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் :
அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவும் – மேற்குவங்க முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்
அதேபோல், டல்லாஸில் ராகுல் பேசியது பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அவரது பாட்டியிடம் சென்று கேட்பதற்கு ஏதும் தொழில்நுட்பம் இருந்தால் அதன்மூலம் அவரிடம் சென்று ஆர்.எஸ்.எஸின் பங்கு குறித்து கேட்டறிய வேண்டும் அல்லது வரலாற்றின் பக்கங்களை பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்துக்கொள்வதற்கு ராகுலால் இந்தப் பிறப்பில் முடியாது. அவர் பல பிறப்புகளை எடுக்க வேண்டும். துரோகியால் ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்துக்கொள்ள முடியாது.
ராகுல் வெளிநாடு சென்றது இந்தியாவின் நற்பெயரை கெடுப்பதற்குபோல் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தில் இருந்தும், மதிப்புகளில் இருந்தும் ஆர்.எஸ்.எஸ். உருவானது” என்று கடுமையாக பதிலடி தந்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)