• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நெல்லையில் ஆக.19 முதல் செப்.6 வரை சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு தொழில்கடன் முகாம் | Special business loan camp for MSME in Nellai from August 19 to September 6

GenevaTimes by GenevaTimes
August 16, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நெல்லையில் ஆக.19 முதல் செப்.6 வரை சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு தொழில்கடன் முகாம் | Special business loan camp for MSME in Nellai from August 19 to September 6
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்காசி: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் (முகவரி:-5சி/5பி, சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 2-வது மாடி, திருவனந்தபுரம் ரோடு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி-627003) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.1.50 கோடி மற்றும் இதர மானியங்கள்) மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். மேலும், NEEDS திட்ட கடனுக்கு 3 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தரப்படும்.நவீன ஆலை மற்றும் நவீன இயந்திரங்கள் விரிவாக்கத்துக்கு 5 சதவீத வட்டி மானியம் பெற்றுத் தரப்படும். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 35 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் 6 சதவீத வட்டி மானியம் பெற்றுத்தரப்படும்.

இந்த முகாமில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து ஆய்வு கட்டண தள்ளுபடியை பெற்று தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு 0462-2502038, 94443 96830, 94443 96881 என்ற எண்களிலும், கிளை மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் திருநெல்வேலி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

சிறிய தள்ளுவண்டியில் ஆரம்பித்த தொழில்… இன்று ரூ.2000 கோடி வருமானம் ஈட்டிய Wow Momo நிறுவனர்

Next Post

ஆடி வெள்ளியுடன் சேர்ந்தார் போல வரலட்சுமி நோன்பு… அதிர வைக்கும் பூக்கள் விலை…

Next Post
ஆடி வெள்ளியுடன் சேர்ந்தார் போல வரலட்சுமி நோன்பு… அதிர வைக்கும் பூக்கள் விலை…

ஆடி வெள்ளியுடன் சேர்ந்தார் போல வரலட்சுமி நோன்பு... அதிர வைக்கும் பூக்கள் விலை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin