வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையான இன்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாகச் சுபதினங்கள், முக்கியமான வழிபாடுகள் நடைபெறும் தினங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிப்பதால் காய்கறிகளில் விலையும் கிடுகிடுவென உயரும். ஆனால் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்றும் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் வரத்து போதுமானதாக இருப்பதால் காய்கறி விலையில் பெரியளவில் மாற்றமில்லாமல் பொதுமக்களுக்குக் கட்டுபடி ஆகும் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் காயான தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மார்க்கெட்டிற்கு வருகிறது.
இதையும் படிங்க: ஆடி மாத கடைசி வெள்ளி… விண்ணை முட்டும் பூக்கள் விலை… மல்லிப்பூ விலை தெரியுமா…
ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை மற்றும் ஒட்டச்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இது குறித்து வியாபாரி பெரியசாமி கூறுகையில், “ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு வியாபாரம் செழிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காய்கறிகளின் விலை பெரிய மாற்றமில்லாமல் அனைத்துக் காய்கறிகளின் விளையும் பொதுமக்களுக்குக் கட்டுபடி ஆகும் நிலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
மிளகாய் கிலோ ரூ.60 ரூபாய், கத்திரிக்காய் கிலோ ரூ.30, கேரட் கிலோ ரூ.50, அவரைக்காய் கிலோ ரூ.30, பீன்ஸ் கிலோ ரூ.40, சீனி அவரைக்காய் கிலோ ரூ.30, வெண்டைக்காய் கிலோ ரூ.25, பீட்ரூட் கிலோ ரூ.25, முள்ளங்கி கிலோ ரூ.20, முருங்கைக்காய் கிலோ ரூ.30, தக்காளி கிலோ ரூ.30, பட்டர் பீன்ஸ் மிகவும் விலை குறைந்து கிலோ ரூ.120க்கும் தான் விற்பனை ஆகின்றது.
இதையும் படிங்க: நான் வெஜ் உணவுக்கு நோ நோ சொல்லும் மக்கள்… தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா…
அடுத்த மாதம் ஆவணியில் கோவில் பண்டிகையை விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்களும் அதிகமாகக் காணப்படுவதால் காய்கறிகளின் விலையில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)