1947-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை என்பது உலக வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் ஆகும். பிரிவினையின் போது ஆயிரக்கணக்கானோர் பலியானதோடு லட்சக்கணக்கானோரின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது. பலர் தங்கள் வீடுகளில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டு, அதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த ஊரையும் வாழ்வாதாரத்தையும் விட்டுவிட்டு வெளியேறினர். இந்த நிகழ்வு பல தனிநபர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது.
அதுவரை மாட மாளிகையில் வசித்து வந்த பலர், அடுத்தவேளை உணவிற்கு திண்டாடினர். தங்கள் சொந்த ஊரில், அபரிமிதமான செல்வத்தையும் பணத்தையும் வைத்திருந்த தனிநபர்கள் பலரும், பிரிவினையின் போது தாங்கள் கடினமாக உழைத்து சேர்த்த அனைத்தையும் இழந்தனர். இருப்பினும், சில தனிநபர்கள் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து வெளியேறி, வாழ்க்கையில் பெரிய ஒன்றை அடைய முயற்சி செய்தனர். அவர்களில் ஒருவர்தான் வினோத் அகர்வால். பல கடினமான சூழ்நிலைகளை அனுபவித்த இவர், இன்று மத்திய பிரதேசத்தின் பெரும் பணக்கரராக இருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தின் வணிகத் தலைநகரான இந்தூரில் பல பெரிய தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்களில் நிலக்கரி தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் வினோத் அகர்வாலும் ஒருவர்.
அகர்வால் நிலக்கரி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குனரான வினோத் அகர்வால், மத்திய பிரதேசத்தின் பணக்கார நபராவார். IIFL Hurun-ன் படியலின் படி, இந்தியாவின் 1037 பணக்காரர்களின் பட்டியலில் 279-வது இடத்தை இவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக இருந்தது.
இதையும் படிக்க:
மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம்; இவர் பணிபுரிவது எங்கு தெரியுமா?
அகர்வால் நிலக்கரி நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் ரூ.10,000 கோடி ஆகும். 2022-ம் ஆண்டில், வினோத் அகர்வால் ரூ.243 கோடிக்கு வருமான வரியும், ஜிஎஸ்டியாக ரூ.625 கோடியும் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
நாட்டின் பணக்காரர்களில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொண்டுள்ளத்திற்கும் பெயர் பெற்றவர் அகர்வால். 2022-ம் ஆண்டில், வினோத் அகர்வால் அறக்கட்டளைக்கு ரூ.25 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது. அகர்வால் நிலக்கரி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் தனது குடும்பம் அனைத்தையும் இழந்து, எளிய பின்னனியில் இருந்து வந்தவர் வினோத் அகர்வால். அவர் தனது குடும்பத்துடன் இந்தூருக்குச் சென்றபோது அவருக்கு வெறும் 3 வயதுதான் ஆகியிருந்தது.
500 சதுர அடி கொண்ட வீட்டில் தனது 8 உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார் வினோத் அகர்வால். தனது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அதையெல்லாம் சமாளித்து மகத்தான வெற்றியைப் பெற அவரால் முடிந்தது. இந்த குணம் தான் அவரை மத்தியப் பிரதேசத்தின் பணக்காரர் என்ற பெயரெடுக்க வழிவகுத்தது.
.