பாரிஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் மகளிர் ஓட்டப்போட்டியில் செயின்ட் லூசியாவின் ஜூலியன் ஆல்ஃபிரட், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் கடந்த மாதம் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொண்டாடப்படவுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் மகளிர் ஓட்டப்போட்டியின் அரையிறுதியில் 10 புள்ளி எட்டு நான்கு வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்த ஜூலியன் ஆல்ஃபிரட், இறுதிப் போட்டியில் தனது உச்சபட்ச திறனை வெளிப்படுத்தி, தனது சொந்த சாதனையை முறியடித்து 10 புள்ளி ஏழு இரண்டு வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்தார்.
இதன் மூலம், உலகின் அதிவேக பெண்ணாக உருவெடுத்த செயின்ட் லூசியாவின் ஜூலியன் ஆல்ஃபிரட் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.
இதையும் படிக்க:
ஒலிம்பிக் 2024 : ஆண்கள் பேட்மிண்டன் அரையிறுதி… நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய வீரர்… போட்டியை எதில் பார்க்கலாம்?
ஒலிம்பிக் போட்டிகளில் பெரும் மதிப்புமிக்கதாக கருதப்படும் 100 மீட்டர் ஓட்டத்தின் தங்கப் பதக்கம், கரீபியன் தீவுகளில் உள்ள குட்டி தீவு நாடான செயின்ட் லூசியாவின், ஒலிம்பிக் வரலாற்றில் கிடைத்த முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வீராங்கனைகளான ஷாகேரி ரிச்சர்ட்சன் வெள்ளிப் பதக்கத்தையும், சக நாட்டவரான மெலிசா ஜெஃபர்சன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
.