லாங் ரைடிங் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்? நம்மில் பலரும் இயற்கை காட்சிகளை ரசித்தபடி நீண்ட தூரம் காரிலோ அல்லது பைக்கிலோ பயணிக்க விரும்புவோம். ஆனால் நிஜத்தில் மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் கூட பேருந்திலும் ரயிலிலும், விமானத்திலும் தான் செல்கிறோம். இதுவே வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், விமானத்தில் மட்டுமே செல்ல முடியும். ஆனால் கனடாவைச் சேர்ந்த கார் ஆர்வலர் ஒருவர், தனது SUV காரை கனடாவில் இருந்து இந்தியா வரை 19000 கி.மீ தூரம் ஓட்டி வந்துள்ளார். அவர் இந்தியாவை அடைய சுமார் 40 நாட்கள் ஆகியுள்ளது. இந்த நம்ப முடியாத காரியத்தைச் செய்துள்ள சாதனை நபரின் பெயர் என்ன தெரியுமா? ஜஸ்மீத் சிங் சாஹ்னி.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஜஸ்மீத் தனது ஃபோர்டு பிரான்கோ (Ford Bronco) SUV காரை ஓட்டிக்கொண்டு கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அவர் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு 18 நாடுகளை சுற்றி வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, ஹோட்டல்கள் எதிலும் தங்காமல் தனது SUV காரில் தான் தூங்கியுள்ளார். இந்தப் பயணத்திற்காக மட்டுமே ரூ.25 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ள அவர் இதற்காக 2.5 வருடங்கள் திட்டமிட்டுள்ளார். இன்று தனது வித்தியாசமான மற்றும் தனித்துவமான பயண முறையால் உலகம் முழுவதும் பிரபலமான மனிதராக மாறிப்போனார்.
இந்தப் பயணம் எப்படி சாத்தியமானது? கனடா நாட்டின் டொராண்டோ நகரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஜஸ்மீத், அங்கிருந்து 2200 கி.மீ தூரம் பயணம் செய்து ஹாலிஃபாக்ஸ் என்ற இடத்தை சென்றடைந்தார். அதன்பிறகு இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தாக வேண்டும். இதற்கு அவர் ஒரு கப்பலில் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் இங்கிலாந்தில் இருந்து ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் நாட்டிற்கு படகு மூலம் சென்றார். இப்படியே அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது காரில் பெரும்பாலான தூரத்தை கடந்தார்.
இதையும் படிங்க:
2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்… என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இந்தியாவிற்குள் பாகிஸ்தான் வழியாகவே நுழைந்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அட்டாரி பாக் எல்லையில் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி ஜஸ்மீத்தை வரவேற்றனர். மிகப்பெரும் கார் ஆர்வலரான ஜஸ்மீத்திற்கு, அமெரிக்க கார்கள் மீது எப்போதுமே கொள்ளைப் ப்ரியம். இவரது SUV காரான Ford Bronco, அமெரிக்கா மற்றும் கனடாவில் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோட் கார்களில் ஒன்றாகும். தனது அசாத்தியமான பயணம் குறித்து கடந்த வருடம் டிஎன்ஏ இந்தியா செய்தி தளத்திற்கு ஜஸ்மீத் பேட்டியும் அளித்துள்ளார்.
.