பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை Gan Ching Hwee இரண்டாவது தேசிய சாதனையை படைத்துள்ளார்.
கான் தனது சொந்த சாதனையை விட சுமார் 2 விநாடிகளில் ஆட்டத்தை முடித்துள்ளார்.
ஆட்டத்தை முடிக்க அவர் எடுத்து கொண்ட நேரம் 8:32.37 நிமிடங்கள்.
இதற்குமுன் கான் தேசிய சாதனையை 1500 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.