நாட்டில் பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுவதோடு, சில வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில், இறுதிப் போட்டியில் கனடா நாட்டின் ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ், எமிரேட்ஸ் என்பிடி மற்றும் கோட்டக் மகிந்திரா வங்கி ஆகியவை இருக்கின்றன.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 45.48 % பங்குகளையும், எல்.ஐ.சி. நிறுவனம் 49.24% பங்குகளையும் வைத்துள்ளன. இதில் 60.7% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது. 2 ஆண்டு காலத்திற்கு பிறகு தற்போது 3 நிறுவனங்களை ஆர்பிஐ தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முன்னணியில் இருப்பது ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் என்று கூறப்படுகிறது. கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரரான பிரேம் வாட்ஸ், ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். முதலில் Markel Financial என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கிய அவர், பின்னர் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஸ் என்று மாற்றினார். பின்னர் சில காப்பீட்டு நிறுவனங்களை வாங்கிய அவர், 2019ஆம் ஆண்டில் ஹாம்ப்ளின் முதலீட்டு கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:
உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா..? இந்த தேதிதான் கடைசி…
தற்போது இந்தியாவில் ஐடிபிஐ வங்கியை வாங்கும் முனைப்புடன் ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் உலகளவில் பல நிறுவனங்களில் பங்குகளை வாங்கியுள்ளது.
.