சிங்கப்பூர்: சிங்கப்பூரில் QR குறியீடு அடிப்படையிலான பயணத்தை அறிமுகப்படுத்தியதன் பிறகு, பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகளை விரைவாக கடந்து செல்கின்றனர் என குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆணையம் இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில் “F1 கார் பார்க்கிங் போன்ற நிலச் சோதனைச் சாவடிகளை பயணிகள் விரைவாக கடக்க முடியும்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்வதால் எந்த வித்தியாசமும் இல்லை என சிலர் கூறலாம் என்று சொன்னார்.