சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் மைக்கேல் ராஜ் என்பவர் 2022 இல் பயணிகளிடம் ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடியதற்காகவும், தனது அம்மாவின் நகைகளைத் திருடி அடகு வைத்ததற்காகவும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்சியில் தூங்கி கொண்டிருந்த 3 பயணிகளிடம் இருந்து 3 விலைமதிப்பான கைக்கடிகாரங்களைத் திருடியுள்ளார். அதன் மொத்த மதிப்பு சுமார் $200,000 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது.அதில் ஒரு கைக்கடிகாரம் மட்டுமே அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நபர் 2021 இல் தனது தாயிடம் $43,300 வெள்ளி மதிப்புள்ள 13 செட் நகைகளைத் திருடி அடகு வைத்துள்ளார்.