அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை. இந்தப் பட்டியலில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கை விட அதிகமாக சம்பாதித்து தனித்து நிற்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகேஷ் அரோரா.
பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் (Palo Alto Networks) தலைமை நிர்வாக அதிகாரியான அரோரா, 151.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெற்று இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் பல பிரபலமான தொழில்நுட்ப நிர்வாகிகளின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
நிகேஷ் அரோராவின் சம்பளம் காரணமாக அவரை பிராட்காமின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக் டானுக்கு அடுத்த இடத்தில் நிற்க வைத்துள்ளது. ஹாக் டான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களோடு ஒப்பிடும்போது, ஜுக்கர்பெர்க் 24.40 மில்லியன் அமெரிக்க டாலரையும், சுந்தர் பிச்சை 8.8 மில்லியன் அமெரிக்க டாலரையும் சம்பாதிக்கிறார்கள். அரோராவின் வருமானம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது.
இந்தளவு அதிக சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ள அரோராவின் வாழ்க்கைப் பயணத்தை நாம் சற்று தெரிந்துகொள்ள வேண்டும். டெல்லியில் உள்ள ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அரோரா, ஐஐடி-ல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை தொழில்நுட்பம் (B Tech) பட்டம் பெற்றார். பாலோ ஆல்டோ நெட்வொர்க்கில் பணிபுரிவதற்கு முன்பே அரோரா, கூகுள் மற்றும் சாப்ட் பேங்க் போன்ற முக்கிய நிறுவனங்களில் தான் பணியாற்றியதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் நற்பெயரைப் பெற்றிருந்தார்.
2012ம் ஆண்டில் ஆண்டுக்கு 51 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளத்துடன் அரோரா பணியமர்த்தப்பட்டபோது கூகுளில் அதிக ஊதியம் பெறும் நிர்வாகி ஆனார். கூகுள் நிறுவனத்துடனான அவரது பதவிக்காலத்தின் முடிவில், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகள் அவரிடம் இருந்தது.
இதையும் படிக்க:
இதை பண்ணிட்டீங்களா..? பாஸ்டேக் புதிய நடைமுறை இன்று முதல் அமல்
அரோராவின் ஆரம்ப கால சாதனைகள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவை. அவர் சாஃப்ட் பேங்க் குழுமத்தில் இருந்த காலத்தில், ஜப்பானில் பணியாற்றிய முதல் வருடத்திலேயே 135 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெற்று புதிய சாதனையைப் படைத்தார். ப்ளூம்பெர்க், சாஃப்ட் பேங்லில் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் அரோராவை புகழ்பெற்ற முதலீட்டாளர் மாசாயோஷி சன்னின் வாரிசாக ஆவதற்கு அத்தனை சாத்தியங்களும் உள்ளவராக கருதினர். வணிக உலகில் அரோராவின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதையும் படிக்க:
Gas Cylinders Price | உயர்ந்தது கேஸ் சிலிண்டர் விலை… வெளியான புதிய விலைப்பட்டியல்
நிகேஷ் அரோராவின் அதிகபடியான வருவாய் மற்றும் தொழில் சாதனைகள், தொழில்நுட்பத் துறையில் அவரது குறிப்பிடத்தக்க தாக்கத்தையும், அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் சிஇஓ-க்களில் ஒருவராக அவர் வகித்த பங்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் கல்லூரிப் படிப்பை முடித்து, உலக அரங்கில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் பணிபுரிந்துள்ள பயணம் அரோராவின் அசாத்தியமான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
.