நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களால் சாமானியர்கள் சிரமப்படுகின்றனர். இப்போது அதை மேலும் சுமையாக்க காலணிகளின் விலையும் உயர உள்ளது. இந்த விதிகளின்படி காலணிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். காலணிகள் தொடர்பாக, ஆகஸ்ட் 1 முதல் புதிய தரநிலைகள் அமலுக்கு வருகின்றன. அதிலிருந்து தயாரிக்கப்பட்ட காலணிகள், பூட்ஸ் மற்றும் செருப்புகள் இந்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று இந்திய தரநிலை பணியகம் (பிஐஎஸ்) தெளிவுப்படுத்தியுள்ளது. இதனால், அடுத்த மாதம் முதல் காலணிகளின் விலை உயர வாய்ப்புள்ளது. திருத்தப்பட்ட BIS விதிமுறைகள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வரும்
காலணித் தயாரிப்புகளில் கவனம் செலுத்துங்கள்
ஆகஸ்ட் 1, 2024 முதல் BIS நெறிமுறைகளில் மிக முக்கியமான மாற்றங்கள் காலணித் துறையுடன் தொடர்புடையவை. இந்த புதிய விதிமுறைகள் சந்தையில் கிடைக்கும் காலணி தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தரக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி, காலணி உற்பத்தியாளர்கள் ஐஎஸ் 6721, ஐஎஸ் 10702 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த திருத்தப்பட்ட தரங்களின்படி, ரெக்சின், இன்சோல் மற்றும் லைனிங் போன்ற காலணிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
காலணிகளின் வெளிப்புறப் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள் தேய்ந்து போகாது, நீண்ட காலம் நீடிக்கும் என்று தரப் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல வெளிப்புறப் பகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே விதிமுறையாகும். வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், நீண்ட காலம் நீடிக்கும் பொருட்களை வழங்குவதற்காக இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய மாற்றங்கள்:
கடுமையான தரக் கட்டுப்பாட்டு: இந்த புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவின்படி காலணி உற்பத்தியாளர்கள் IS 6721 மற்றும் IS 10702 வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். இது மூலப்பொருட்கள், கட்டுமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆயுள் ஆகியவற்றில் கடுமையான தேவைகளை விதிக்கிறது.
விலைகள் மீதான தாக்கம்: இந்த புதிய தரநிலைகள் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காலணி விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விதிகளை அமல்படுத்திய பிறகு பார்க்க வேண்டும்.
பழைய இருப்பு: விற்பனையாளர்கள் தங்களிடம் பழைய ஸ்டாக் அதிகமாக இருந்தால் தொடர்ந்து விற்பனை செய்யலாம், ஆனால் அந்த விவரங்களை பிஐஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
46 பொருட்கள்: ஆகஸ்டு 1 முதல் மொத்தம் 46 காலணி பொருட்கள் திருத்தப்பட்ட BIS விதிமுறைகளின் கீழ் வரும்.
விலக்கு: ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்கும் குறைவான உற்பத்தியாளர்களுக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
EPFO : ஓய்வுக்குப் பிறகு EPFO மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இது உங்களுக்கு தெரியுமா?
BIS என்றால் என்ன?
பிஐஎஸ் என்பது நமது நாட்டின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இந்தியாவில் விற்கப்படும் பொருட்களுக்கான தரத்தை இந்த அமைப்பே நிர்ணயம் செய்கிறது. பிஐஎஸ் தரம் வாங்குபவரின் உரிமை என்று இந்திய தர நிர்ணய அமைப்பு கூறுகிறது. பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உட்பட அனைத்தும் பிஐஎஸ் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி இருக்க வேண்டும். நாட்டு மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பிஐஎஸ் தர முத்திரை இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வரும் போன்கள் உட்பட பல வகையான எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பிஐஎஸ் அடையாளம் கட்டாயம்.
தயாரிப்பு பாதுகாப்பு: தயாரிப்புகள் வாடிக்கையாளருக்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வது.
தரம்: பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தர அளவுகளை வரையறுக்கப்படுவது.
இதையும் படிக்க:
உலகளவில் அதிக தொண்டு செய்யும் நபர் இவர்தான் – டாடா, ஷிவ் நாடார் எல்லாம் இல்லை!
செயல்திறன்: தயாரிப்புகளின் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் கொண்டிருப்பது.
ஒருங்கிணைப்பு: தயாரிப்புகளை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் அல்லது தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என்பதை உறுதி செய்வது.
சுற்றுச்சூழல்: தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருப்பது.
நுகர்வோர் பாதுகாப்பு: வாடிக்கையாளரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது.
.